கல்லூரியின் அன்றாட அமல்கள்
- தினமும் காலை 8.30 முதல் 8.45 மணி வரை PRAYER – துஆ மஜ்லிஸ் (பிரார்தனை) நடைபெறும்.
- காலை 8.45 முதல் 10..50 மணி வரை பாடநேரமாகும்.
- இடையில் 15 நிமிடங்கள் லுஹா தொழுகை இடைவேளை.
- காலை 11.05 முதல் மதியம் 12.50 மணி வரை பாடநேரமாகும்.
- மதியம் 12.50 முதல் 2.20 மணி வரை ஓய்வு லுஹர் தொழுகை மற்றும் மதிய உணவு இடைவேளை.
- பிற்பகல் 2.20 மணி முதல் மாலை 5.00 மணி வரை பாடநேரங்கள் ஆகும்.
- அதை தொடர்ந்து அஸர் தொழுகை.
- அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவிகளுக்கு காலை 06.30 மணி முதல் கூடுதல் பாட நேரங்கள் ஆகும்.
- தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் விடுதியில் திக்ரு மஜ்லிஸ் நடைபெறும்.
- ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் மதியம் 02.30 மணிக்கு அனைத்து பெண்மக்களும் பங்கு பெறும் திக்ரு,ஸலவாத்து மஜ்லிஸ் நடைபெறும்.
- ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை மாணவிகளால் நடத்தப்படும் பயான் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும்.
- ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மதியம் ஆங்கிலம் மற்றும் பொது அறிவு மன்றம் நடைபெறும். அதனை தொடர்ந்து மாணவியர் மன்றத்தின் மூலம் அனைத்து
மாணவிகளுக்கும் சொற்பொழிவு (பயான்) பயிற்சி அளிக்கப்படும்.
- ஐங்காலத் தொழுகையுடன் சுன்னத்தான தொழுகையை பேண வைப்பதுடன் தஹஜ்ஜத் தொழுகையை கடைப்பிடிக்கச் செய்வது.
- ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்திலும் பிறை 13, 14, 15 ஆகிய மூன்று தினங்கள் நோன்பு வைக்கச்செய்வதுடன் மற்ற சுன்னத்தான
நோன்புகளையும் பேண வைப்பது.
- தினமும் ஒரு மாணவி நோன்பாளியாக இருப்பது.
- மாணவிகளின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு மாலை 5.00 மணிமுதல் 5.30 மணிவரை விளையாட அனுமதிப்பது.
- மாணவியரின் மார்க்க அறிவை வளர்த்திட தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞர்களை கொண்டு (SEMINOR) ஒருநாள் பயிலரங்க வகுப்புகள் அவ்வப்போது
நடத்தப்படுகிறது.
- பாதுகாப்பான விடுதி வசதி, சுகாதாரமான இருப்பிடம், தரமான கல்வி.
- மார்க்க அறிவுடன் நல்வழியில் நடக்கும் சிறந்த பட்டதாரிகளை உருவாக்கி நல்லொழுக்கமுள்ள பெண்மக்களை சமுதாயத்திற்கு வழங்குவதே எம் கல்லூரியின் சிறப்பம்சம்.