பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
நூருல் ஈமான் இஸ்லாமிய மகளிர் கல்லூரி
பேட்மாநகரம்-628 620
நூருல் ஈமான் கல்வி அறக்கட்டளை ஒர் அறிமுகம்
அல்லாஹ் உதவியால் 1982 ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு பணிகள் செய்யும் நோக்கத்தில் சென்ற இந்தியர்களில் பேட்மாநகரம் வாசிகளும் அடங்குவர். தங்கள் குடும்ப வாழ்வாதாரம் வளமாக வேண்டும் என இரவு பகல் பாராது தங்கள் உடலை வருத்தி பணிகள் செய்த இந்த நல்ல உள்ளங்கள் தான் பிறந்த மண்ணிற்கு (பேட்மாநகரத்திற்கு) வளமும் நலமும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் சம்பாதித்த தொகையில் ஒரு மிகச் சிறிய தொகையை சிறுகச் சிறுகச் சேமித்து அதை பேட்மாநகரம் நற்பணி மன்றம் - சவுதி அரேபியா என்ற அமைப்பு மூலம் சில நற்பணிகளை பேட்மாநகரத்தில் செய்து வந்தார்கள். இந்த அமைப்பு செய்த சேவைகளை எழுத்து வடிவத்தில் பட்டியலிட வேண்டுமென்பது தேவையற்றது. அல்லாஹ் அறிந்தவன். கூலியும் அவனிடமே இன்ஷா அல்லாஹ் உதவியவர்கள் பெற்றுக் கொள்வார்கள். இந்த பேட்மாநகரம் நற்பணி மன்றத்தை சிறப்பாக நடத்தியவர்களில் அல்ஹாஜ் S.I.B இப்திகார்தீன், மர்ஹீம் அல்ஹாஜ் M.S.முஹம்மது இஸ்ஹாக், மர்ஹீம் அல்ஹாஜ் K.சம்சுத்தீன், அல்ஹாஜ் A.K.குதுபுத்தீன், அல்ஹாஜ் S.M.A.சித்தீக் ஆலிம், அல்ஹாஜ் B.அப்துல்லாஹ் முத்தலிபு, அல்ஹாஜ் A.M.அமானுல்லாஹ் கான், அல்ஹாஜ் A.M. ஹிதாயத்துல்லாஹ், அல்ஹாஜ் S.M. ஹாலிதீன், ஜனாப் D.பாபுகனி, அல்ஹாஜ் A.M.S. ஸபீர் அஹ்மது, அல்ஹாஜ் A.H.பைரோஸ், அல்ஹாஜ் A.S. பதுருஸ்ஸமான், அல்ஹாஜ் H.நஸீர்தீன், அல்ஹாஜ் A.செய்யது முஸ்ஸம்மில், அல்ஹாஜ் A.ஜாக்கிர் ஹீஸைன் B.E., அல்ஹாஜ் A.M.ஐய்யூப், அல்ஹாஜ் I.M.அஸ்ரப் அலி, ஜனாப் M.M.சிராஜுத்தீன், அல்ஹாஜ் I.M.ஹாஜா முஹ்யித்தீன், அல்ஹாஜ், ஜனாப் A.K.முஹம்மது மாஹீன், அல்ஹாபிழ் A.R. கலீமுத்தீன் ஆலிம் ,அல்ஹாஜ் A.M.N.ஷாஹுல் ஹமீத் , அல்ஹாஜ் B. பக்ருத்தீன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சுமார் 18 ஆண்டு காலங்கள் சவுதி அரேபியாவில் பணி புரிந்து தாயகம் திரும்பிய மேற்கண்ட பிரமுகர்கள் சவுதியில் செய்த நற்பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற நன்நோக்கத்தில் நூருல் ஈமான் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அமைப்பை 1995 ம் ஆண்டு அல்ஹாஜ் S.M.A.சித்தீக் ஆலிம், அல்ஹாஜ் A.M.அமானுல்லாஹ் கான் ஆகியோர் ரிஜிஸ்டர் செய்து துவக்கி வைத்தார்கள். இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கமாக மார்க்கக் கல்வியும், பொதுக் கல்வியும், தொழிற் கல்வியும் நமது இளைய தலை முறையினருக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு முயற்சிகள் கொள்ளப்பட்டது. 25 நபர்கள் கொண்ட ஒரு நிர்வாகக் குழு இந்த அறக்கட்டளையை நிர;வகிக்க வேண்டும் என்றும் முறைபடுத்தப்பட்டது.
அறக்கட்டளையின் நோக்கங்கள்
1. நூருல் ஈமான் இஸ்லாமிய மகளிர் கல்லூரி.
(23.12.2001 முதல் செயல்படுகிறது)
2. நூருல் ஈமான் திருக்குர்ஆன் பாடசாலை.
(19.01.2002 முதல் செயல்படுகிறது)
3. நூருல் ஈமான் தொழிற் கல்விக் கூடம்.
(தையல் பயிற்சியகம் 01.06.2006 முதல் செயல்படுகிறது)
(கனிணி பயிற்சியகம் 01.06.2006 முதல் செயல்படுகிறது)
(M.M.Acadamyயின் வழிகாட்டுதலின்படி நடக்கிறது
4. நூருல் ஈமான் நூலகம். (இன்ஷா அல்லாஹ்)
5. நூருல் ஈமான் காலனி. (இன்ஷா அல்லாஹ்)
வரவு செலவு செயல்பாடுகள்
10.10.1995 அன்று திருவைகுண்டம் பாரத ஸ்டேட் வங்கியில் (State Bank of India, Srivaikundam) நூருல் ஈமான் கல்வி அறக்கட்டளை (Noorul Emaan Educational Trust) என்ற பெயரில் ஜாயிண்ட் அக்கவுண்டு திறக்கப்பட்டது. அறக்கட்டளையின் தலைவர் மற்றும் பொருளாளர் அல்லது செயலாளர் மற்றும் பொருளாளர் என்ற முறையில் இந்த அக்கவுண்ட் நிர்வகிக்கப்படுகிறது. அறக்கட்டளைக்கு வரும் சந்தா-நன்கொடைகள் அனைத்தும் முறைப்படி இந்த அக்கவுண்டிற்கு வரவு செய்யப்படுகிறது. வரவு - செலவு விவரங்கள் அடங்கிய ஆண்டறிக்கையை சந்தாதாரர்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.
ACCOUNT DETAILS
ACCOUNT NAME :- NOORUL EMAAN EDUCATIONAL TRUST
REGISTERED NO :- 49/1995
CURRENT ACCOUNT NO :- 11261545093
BANK NAME :- STATE BANK OF INDIA, SRIVAIKUNDAM
IFSC CODE :- SBIN0000920
MICR CODE :- 627002028
This website was designed by Haneef